/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
ADDED : செப் 11, 2024 06:19 AM
கிருஷ்ணகிரி: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்-லுாரி மாணவ, மாணவியருக்கும், மாற்றுத்திறனாளிகள், பொது-மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என, 5 பிரிவுகளில் நடக்கிறது. மேலும், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்போட்டிகள், 8 இடங்களில் நடக்கிறது. அதன்படி, கிருஷ்ண-கிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று பள்ளி மாணவ,
மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் துவங்கின. போட்டி-களை மாவட்ட கலெக்டர் சரயு, பலுானை பறக்கவிட்டு துவக்கி வைத்தார்.
இதில், கேரம், சிலம்பம், நீச்சல், ஹேண்ட்பால், கூடைப்பந்து, வாலிபால், செஸ், கால்பந்து, இறகு பந்து, கிரிக்கெட், ஹாக்கி, மேசைப்பந்து, கோ கோ, கபடி, தடகளம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. போட்டிகளில், 2,400
மாணவ, மாண-வியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர் காயத்திரிதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வரும், 17 முதல், 24 வரையும், பொதுமக்களுக்கு வரும், 19 முதல், 21 வரையும், மாற்றுத்திறனா-ளிகளுக்கு வரும், 23 அன்றும், அரசு ஊழியர்களுக்கு, 24 அன்றும் விளையாட்டு போட்டிகள்
நடக்கிறது. இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்-கேற்க முடியும்.