/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆயுத பூஜை பொருள் விற்பனைக்கு குவிப்பு
/
ஆயுத பூஜை பொருள் விற்பனைக்கு குவிப்பு
ADDED : அக் 11, 2024 01:03 AM
ஆயுத பூஜை பொருள்
விற்பனைக்கு குவிப்பு
கிருஷ்ணகிரி, அக். 11-
இன்று (அக்.11) ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், வாழை மரம், சாம்பல் பூசணி, பொரி, பழங்கள், வண்ணத்தோரணங்கள் மற்றும் பூக்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு ஜோடி பெரிய வாழை மரம், 400 ரூபாய், வாகனத்தில் கட்டும் சிறிய வாழை மரம் ஒரு ஜோடி, 30 முதல், 50 ரூபாய் என விற்றது.
சாம்பல் பூசணி ஒரு கிலோ, 20 முதல், 30 ரூபாய் வரை விற்றது. சாம்பல் பூசணி கிருஷ்ணகிரியில் மட்டும், 50 டன் அளவிற்கு விற்பனைக்கு குவித்துள்ளனர். நேற்று காலை சாமந்தி பூ ஒரு மார், 150 ரூபாய், மாலையில், 120 ரூபாய் என விற்றது.
சில்லரை விலையில் ஒரு படி பொறி கடந்த ஆண்டை போல், 15 ரூபாய் என விற்பனையானது. குண்டுமல்லி பூ விலை அதிகரித்து நேற்று, ஒரு கிலோ, 800 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வண்ணம் அடிக்கும் பணிகள் நடந்ததால், இன்று பூஜை பொருட்கள் அதிகம் விற்பனையாகும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

