/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டெண்டர் காலாவதியான போதும் சுங்க கட்டணம் வசூல் ஓசூர் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
/
டெண்டர் காலாவதியான போதும் சுங்க கட்டணம் வசூல் ஓசூர் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
டெண்டர் காலாவதியான போதும் சுங்க கட்டணம் வசூல் ஓசூர் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
டெண்டர் காலாவதியான போதும் சுங்க கட்டணம் வசூல் ஓசூர் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு
ADDED : அக் 19, 2024 02:39 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், 2 ஆண்டுகளாக டெண்டர் விடப்பட்-டாத போதும், நடைபாதை வியாபாரிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து கோடிகளில் சம்பாதித்துள்ள தனிநபர்கள் மாநக-ராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அதேபோல், பஸ் ஸ்டாண்டிலும் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், 7 மாதமாக மோசடியாக சுங்க கட்டண வசூல் நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் நடைபாதை கடைகளுக்கு, சுங்கம் வசூலிக்கும் உரிமம் மூலம், கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்தது. நடைபாதை வியாபா-ரிகள் சிரமப்பட கூடாது என, அதில் கிடைக்கும் வருவாய் வேண்டாம் என முடிவு செய்து, கடந்த, 2 ஆண்டுகளாக சுங்க வசூல் உரிமத்தை, மாநகராட்சி யாருக்கும் வழங்கவில்லை.
இதை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க-வில்லை. அதனால், ஏற்கனவே டெண்டர் எடுத்திருந்த தனி நபர்கள், நடைபாதை வியாபாரிகளிடம், இன்றளவும் சுங்க கட்-டணம் வசூலிக்கின்றனர். ஆயுத பூஜையின் போது ஒரே நாளில் பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர். அதன்படி, டெண்டர் எடுக்காமலேயே தனி நபர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்-றனர். இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி, அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது.
மாமன்றத்தில் புகார்
மேலும் லாரி, மினி வேன், டிராக்டர் போன்ற வாகனங்க-ளுக்கும் தலா, 50 ரூபாய் அளவிற்கு, ஓசூர் மாநகராட்சி என்ற பெயருடன் கூடிய டோக்கன் வழங்கி, சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் குபேரன் ஆகியோர் குற்-றம்சாட்டினர்.
இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார், ஆம்னி பஸ்களுக்கு, 3 ஆண்டுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் டெண்டர், கடந்தாண்டு விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒப்-பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்-காமல், நேற்று முன்தினம் வரை, 7 மாதமாக தினமும், 500க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு தலா, 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாநகராட்சி சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஒருவர் உதவியாக இருந்துள்ளார். இதைய-றிந்த மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்து, சுங்கம் வசூல் செய்வதை உறுதி செய்துள்ளார்.
நடைபாதை வியாபாரிகள், பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்து, தனி நபர்கள் கல்லா கட்டுவது தொடர் கதையாகி வரு-வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை பாயும்
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்தை கேட்டபோது, ''பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டது. அதில், 25 லட்சம் ரூபாய் செலுத்தி டெண்டர் எடுத்தவர்கள், கடந்த மார்ச் மாதம் கடந்-தாண்டு கட்டிய தொகையுடன் கூடுதலாக, 5 சதவீதம் செலுத்தி, ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடந்த ஏப்., முதல் பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்துள்-ளனர். அவர்களுக்கு, 4வது முறையாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இனியும் பணம் செலுத்தா விட்டால், மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டெண்டர் ரத்து செய்யப்படும். அதேபோல், நடைபாதை வியாபாரிகளிடம், சுங்க கட்டணம் வசூல் செய்ய, யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி வசூல் செய்தால் புகார் செய்யலாம். அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.