/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலை கிராமங்களில் சாலை மக்களிடம் கலெக்டர் உறுதி
/
மலை கிராமங்களில் சாலை மக்களிடம் கலெக்டர் உறுதி
ADDED : ஏப் 27, 2025 03:56 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகி-லாளம் பஞ்., உட்பட்ட தொழுவபெட்டா, டி.பழையூர், கவனுார், குல்லட்டி ஆகிய மலை கிராமங்களில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அடர் வனப்ப-குதியிலுள்ள தொழுவபெட்டா கிராமத்தில், மலைவாழ் மக்க-ளுக்கு புதியதாக கட்டப்படும், 10 குடியிருப்புகளை பார்வை-யிட்டு, விரைந்து பணிகளை முடித்து, பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மலைவாழ் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதற்கு, முதியோர் உதவித்தொகை, துவக்கப்பள்ளியை தரம் உயர்த்துவது, சாலை வசதி, சோலார் லைட் வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்-தனர். வனப்பகுதிக்குள் கிராமங்கள் அமைந்துள்ளதால், வனத்து-றையிடம் முறையான அனுமதி பெற்று சாலை அமைக்கவும், அதன் பின் போக்குவரத்து வசதி செய்யவும் நடவடிக்கை எடுப்ப-தாக கலெக்டர் உறுதியளித்தார். மேலும், பழைய தொகுப்பு வீடு-களை கணக்கெடுத்து, புதிய வீடுகள் கட்ட கருத்து தயார் செய்-யவும், கிராமங்களுக்கு கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்-கவும், திறந்தவெளி கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யவும், 4 பழைய மின்கம்பங்களை மாற்றி புதிதாக அமைக்கவும், சம்பந்தப்-பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, ஓசூர் சப்
கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தாசில்தார் கங்கை உட்பட பலர் உடனிருந்-தனர்.

