/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் கலெக்டர் ஆய்வு
/
கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 05, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி,
பெங்களூரு சாலையில், தாலுகா அலுவலகம் அருகில் பெண்கள் கிளை
சிறைச்சாலை உள்ளது. இங்கு நேற்று வந்த, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்
சரயு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். சிறை கைதிகளுக்கு குடிநீர்,
சுகாதார வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பெண்கள் கிளை
சிறைக்கு செய்து தர வேண்டிய, கூடுதல் மேம்பாட்டு பணிகள் குறித்து
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி.,
தமிழரசி, கிளை சிறை கண்காணிப்பாளர் செந்திழரசி, கிருஷ்ணகிரி
தாசில்தார் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.