/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேக்கரியில் காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு
/
பேக்கரியில் காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு
பேக்கரியில் காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு
பேக்கரியில் காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 19, 2025 01:25 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நேற்று காலை துவங்கி, இன்று காலை (ஜூன் 19) காலை, 9:00 மணி வரை நடக்கிறது. அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பல்வேறு கிராமங்களில் கள ஆய்வு செய்தனர்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி அருகே உள்ள கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை, சிகரெட் விற்பனை செய்யப்படுகிறதா சோதனை செய்து, விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,
உரிமையாளரை எச்சரித்தார்.
கெலமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு
விற்பனை சங்க ரேஷன் கடையில், பொருட்கள் வினியோகம் செய்வதை பார்வையிட்டார். ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளி ஆய்வு செய்து, சத்துணவு, முட்டை சரியாக வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார்.
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் அரசு கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பேக்கரியில், காலாவதியான சாக்லெட், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை ஆய்வில் உறுதி செய்த கலெக்டர், அவற்றை பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.