/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அம்ரூத் திட்ட பணிகள் ஏன் மந்தம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
/
அம்ரூத் திட்ட பணிகள் ஏன் மந்தம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
அம்ரூத் திட்ட பணிகள் ஏன் மந்தம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
அம்ரூத் திட்ட பணிகள் ஏன் மந்தம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
ADDED : ஏப் 23, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி:''அம்ரூத் திட்டப்பணிகள் ஏன் இவ்வளவு மந்தமாக நடக்கிறது,'' என அதிகாரிகள், கான்டிராக்டர்களுக்கு டோஸ் விட்ட, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நடக்கும் பல்வேறு பணிகளை, நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அம்ரூத் திட்டத்தில், 6.48 கோடி ரூபாய் மதிப்பில் நீரேற்று மையத்தில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்தேக்கத்தொட்டி, பம்ப் ரூம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அதில், 4.50 கி.மீ., மெயின் பைப் லைனில், 2.10 கி.மீ., அளவில் மட்டுமே பைப் லைன் போடப்பட்டிருந்தது.
அப்போது, அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களிடம், ''குறிப்பட காலக்கெடுவுக்குள் ஏன் திட்டப்பணிகளை முடிக்கவில்லை. மேலும், பைப்லைனும் பாதியில் நிற்கிறது, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள். அம்ரூத் திட்ட கருத்துருப்படி 4,041 குடிநீர் இணைப்புகளுக்கு, 1,100 வீட்டு குடிநீர் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு விடுபட்டுள்ள, பகுதிகளுக்கான கருத்துரு தயாரித்து, அனுமதி பெற்று பணியை உடனடியாக முடியுங்கள்,'' என கடிந்து கொண்டார்.
தொடர்ந்து காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட், ஜின்னா ரோடு குழந்தைகள் மையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் அளித்த பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
காவேரிப்பட்டணம் உதவி செயற்பொறியாளர் செங்குட்டுவன், டவுன் பஞ்., செயல் அலுவலர் ராணி, இளநிலை பொறியாளர் பழனிசாமி, மண்டல துணை தாசில்தார் கணேசன், ஆர்.ஐ., புஷ்பலதா, உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

