/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் மீது லாரி மோதல் கல்லுாரி மாணவர் பலி
/
பைக் மீது லாரி மோதல் கல்லுாரி மாணவர் பலி
ADDED : மே 16, 2025 01:21 AM
ஓசூர்ஓசூர், கே.சி.சி., நகரை சேர்ந்தவர் பிரவீன் ஜனா மகன் ஆகாஷ் ஜனா, 20. ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் மகன் மணிகண்டன், 18. இருவரும், தனியார் கல்லுாரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்தனர்
நேற்று முன்தினம் தேர்வு எழுத கல்லுாரிக்கு ஹோண்டா சைன் பைக்கில் சென்றனர். மணிகண்டன் பைக்கை ஓட்டினார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே காலை, 8:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த ஆகாஷ் ஜனா மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் ஜனா உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.