/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்
/
கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்
ADDED : டிச 13, 2024 09:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த களர்பதியை சேர்ந்தவர் பிரி-யங்கா, 19. இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 5ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மத்துார் போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தனர். அதில், போச்-சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 30, என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.