நிறம் மாறிய ‘ஆவின் குல்பி’ சுவையின்றி உள்ளதாக புகார்
நிறம் மாறிய ‘ஆவின் குல்பி’ சுவையின்றி உள்ளதாக புகார்
UPDATED : நவ 17, 2026 07:21 PM
ADDED : நவ 17, 2026 07:16 PM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ‘ஆவின்’ விற்பனை நிலையத்தில், விற்பனை செய்யப்படும் ‘குல்பி’ நிறம் மாறி, சுவையின்றி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரியில், சேலம் பைபாஸ் அருகே அணுகு சாலையில், ஆவின் இயங்கி வருகிறது. அதன் வெளியே அலுவலகம் செல்லும் நுழைவாயிலில், ஆவின் பாலகம் அமைந்துள்ளது. இங்கு விற்கப்படும் வெள்ளை நிற, ஆவின் குல்பி பார் நிறம் மாறியும், சுவையின்றியும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘இந்த ஆவின் விற்பனை நிலையத்தில், மூன்று நாட்களாக, வெள்ளை நிற குல்பி பாரின் மேல்பகுதி, செம்மண் நிறத்தில் சுவையின்றி இருக்கிறது. புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றனர்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி ஆவின் பொதுமேலாளர் மாலதி கூறுகையில், “புகார்கள் எனக்கு வரவில்லை. இருப்பினும், இதுகுறித்து விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
