தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.17 லட்சம் கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

ரூ.17 லட்சம் கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

ரூ.17 லட்சம் கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்


UPDATED : நவ 17, 2026 07:21 PM

ADDED : நவ 17, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:21 PM ADDED : நவ 17, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, லாரியில் கடத்த முயன்ற, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 17 டன் எடையுள்ள கிரானைட் கல்லை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்சமங்கலத்தில் ஏராளமான கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து, பெரிய கிரானைட் கற்களை வாங்கி, ஸ்லாப்களாக அறுத்து, பாலீஷ் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

இங்குள்ள, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்காக, கிரானைட் கற்கள் அனுமதியின்றி வெட்டி எடுத்து வருவதாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி கனிமவளப்பிரிவு மற்றும் புவியியல் துறை அலுவலர்கள் அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் நின்ற லாரியில், 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 17 டன் எடையுள்ள கிரானைட் கல் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.

இது குறித்து, கிருஷ்ணகிரி உதவி புவியியலாளர் சரவணன் புகார்படி, கந்திகுப்பம் போலீசார், லாரியுடன் கிரானைட் கல்லை பறிமுதல் செய்து, கிரானைட் கல் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, லாரி உரிமையாளர் யாரென, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us