/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.37 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் துவக்கம்
/
ரூ.37 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : நவ 14, 2024 06:57 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட சீனிவாசா கார்டன் பகுதியில், ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியி-லிருந்து சிமென்ட் சாலை அமைக்க, 9.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்-பட்டது. இப்பணிக்கான பூஜை
நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, 22வது வார்டு கவுன்சி-லரும், பொதுசுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் முன்-னிலை வகித்தனர். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை
வகித்து, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், கவுன்சிலர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு
உறுப்பினர் எல்லோராமணி, தி.மு.க., நிர்வாகி ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், நல்லுார் பஞ்., உட்பட்ட சித்தனப்பள்ளி, சிருஷ்டி அவென்யூ ஆகிய பகுதிகளில் தலா, 9.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி டைட்டான் டவுன் சிப் பகுதியில், 8.50
லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.