/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.72 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்
/
ரூ.72 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்
ADDED : அக் 11, 2024 01:02 AM
ரூ.72 லட்சம் மதிப்பிலான
திட்ட பணிகள் துவக்கம்
ஓசூர், அக். 11-
சூளகிரி ஒன்றியம், பி.குருபரப்பள்ளி பஞ்., சூளக்குண்டா கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, மாதேவ்புரம் கிராமத்தில், 4 லட்சம் ரூபாய், பி.குருபரப்பள்ளியில், 4 லட்சம் ரூபாய், காண்ட்ரப்பள்ளியில், 3 லட்சம் ரூபாய், பேரிகையில், 10 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலைகளும், காட்டுநாயக்கன் தொட்டி பஞ்., எலுவப்பள்ளியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய மேடை, நபார்டு திட்டத்தில், 44 லட்சம் ரூபாய் மதிப்பில் பேரிகையில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகிய பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று காலை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரா ரெட்டி, ஒன்றிய செயலாளர் நாகேஷ், வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், பஞ்., தலைவர் பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

