/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சிக்கு பொறுப்பு கமிஷனர்
/
ஓசூர் மாநகராட்சிக்கு பொறுப்பு கமிஷனர்
ADDED : ஜன 28, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் டிட்டோ மாநகராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
இந்நிலையில், மாநகராட்சியில் நிர்வாக குளறுபடிகள் ஏற்படா வண்ணம் இருக்கும் வகையிலும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகவும், சேலம் துணை கமிஷனராக உள்ள பூங்கொடி அருமைக்கண் என்பவரை, ஓசூர் மாநகராட்சி பொறுப்பு கமிஷனராக நியமித்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு நேற்று உத்தரவிட்டுள்ளார்.