/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.38.50 லட்சத்தில் சமுதாயக்கூடம்
/
ரூ.38.50 லட்சத்தில் சமுதாயக்கூடம்
ADDED : ஆக 10, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, வேப்பனஹள்ளி ஒன்றியம், எண்ணேகொள் கிராமத்தில், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய கூடம் கட்டு
வதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சைலேஷ் கிருஷ்ணன், சூர்யா, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், முன்னாள் பஞ்., தலைவர்கள் முருகன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.