/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை அரசு பள்ளியில் வட்டார வானவில் மன்ற போட்டி
/
ஊத்தங்கரை அரசு பள்ளியில் வட்டார வானவில் மன்ற போட்டி
ஊத்தங்கரை அரசு பள்ளியில் வட்டார வானவில் மன்ற போட்டி
ஊத்தங்கரை அரசு பள்ளியில் வட்டார வானவில் மன்ற போட்டி
ADDED : நவ 10, 2024 01:13 AM
ஊத்தங்கரை அரசு பள்ளியில்
வட்டார வானவில் மன்ற போட்டி
ஊத்தங்கரை, நவ. 10-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வானவில் மன்ற போட்டிகள் நடந்தது.
இதில், ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்று, அறிவியல் மற்றும் கணித பாடங்கள் சார்ந்த தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டும் வகையில், சிறந்த படைப்புகளையும், ஆய்வு கட்டுரைகளையும் காட்சிப்படுத்தினர். இப்போட்டியை, ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலர்கள், ஊத்தங்கரை வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஊத்தங்கரை ஒன்றிய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் சிறப்பாக நடத்தினர்.