/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகாரளித்தும் பயனில்ல...குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
/
புகாரளித்தும் பயனில்ல...குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
புகாரளித்தும் பயனில்ல...குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
புகாரளித்தும் பயனில்ல...குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
ADDED : மே 08, 2025 12:57 AM
தர்மபுரி,:காரிமங்கலம் அருகே குடிநீர் கேட்டு புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், திண்டல் பஞ்.,க்குட்பட்ட உச்சம்பட்டி கிராமத்தில், கடந்த சில மாதங்களாக ஓகேனக்கல் குடிநீர் முறையாக வழங்கப் படவில்லை. வாரத்திற்கு ஒருமுறை மட்டும் குறைந்த அளவில் குடிநீர் வழங்கி உள்ளனர். இதுகுறித்து பஞ்., செயலாளரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள், காரிமங்கலம் பி.டி.ஓ.,விடம் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து நேற்று காலை, உச்சம்பட்டி அருகே மொரப்பூர் - காரிமங்கலம் நெடுஞ்சாலையில் அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். காரிமங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், மறியலில் ஈடுபட்ட மக்கள், புகாரளித்தும் பலனில்லை, நடவடிக்கை எடுக்காமல் மறியலை கைவிட மாட்டோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போலீசார் உடனடியாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.