/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக புகார்
/
போச்சம்பள்ளியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக புகார்
போச்சம்பள்ளியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக புகார்
போச்சம்பள்ளியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக புகார்
ADDED : செப் 04, 2024 09:59 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளில் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு உபயோகம், மண்பாண்ட தொழில்களுக்கு களிமண், கிராவல் மண் அள்ள ஆன்லைன் மூலம் அனுமதிக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் கூறியது. விண்ணப்பித்தவர்-களுக்கு அனுமதி அளித்தது. மண் அள்ள காலக்-கெடு முடிந்த நிலையில், ஒரு சிலர் கடந்த, 5 நாட்களுக்கு மேலாக மண் அள்ளி வருகின்றனர்.
புளியம்பட்டி பஞ்.,ல் உள்ள கெங்கிநாய்க்கம்பட்டி, சுண்டகாப்பட்டி ஏரிகள், கீழ்குப்பம் பஞ்.,ல் உள்ள இலப்பங்குட்டை ஏரி, குடிமேனஹள்ளி பஞ்.,ல் உள்ள சாதிநாய்க்கன்பட்டி ஏரி உள்ளிட்ட போச்-சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பல ஏரிகளில், தொடர்ந்து கிராவல் மண் அள்ளி செங்கல் சூளை மற்றும் தனி நபர்களுக்கு டிராக்டர் லோடு, 500 ரூபாய் எனவும் டிம்பர் லாரிகளில், 1,000 முதல், 1,500 ரூபாய் எனவும் விற்பனை நடக்கிறது.
இதுகுறித்து, போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்தி-ரனிடம் கேட்டதற்கு, ''விடுமுறை நாட்கள் கழித்து மற்ற நாட்களில் மண் அள்ளுகின்றனர். நேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மண் அள்ளப்படுவது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவிடம் கேட்டபோது, சம்-மந்தப்பட்ட தாசில்தாரிடம் விசாரித்து உரிய நட-வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.