/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியை திருமணம் செய்த தொழிலாளி மீது புகார்
/
மாணவியை திருமணம் செய்த தொழிலாளி மீது புகார்
ADDED : செப் 26, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பசுபதி, 27, கூலித்தொழிலாளி. இவர் ஓசூரை சேர்ந்த, 17 வயதுள்ள கல்லுாரி மாணவியை காதலித்தார். மாணவியின் வீட்டில் தெரிந்த நிலையில் மாணவியின் பெற்றோர் பசுபதியை கண்டித்துள்ளனர்.
கடந்த ஜூன், 10ல் மாணவியை கடத்திச் சென்ற பசுபதி, வேட்டி-யம்பட்டி முருகர் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து ஓசூர் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராமக்கா, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

