/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலப்பிரச்னையில் பெண்களை தாக்கி வீட்டை சூறையாடிய நால்வர் மீது புகார்

ADDED : மே 17, 2025 01:51 AM
கிருஷ்ணகிரி :கந்திகுப்பம் அருகே, நிலப்
பிரச்னையில் பெண்களை தாக்கி, வீட்டை சூறையாடிய நால்வரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தை சேர்ந்தவர் வீரபத்ரன், 44. இவரது பெரியப்பா மல்லப்பன், 68. இவர்களுக்குள் கந்திகுப்பம் குரும்பர் தெருவில் உள்ள, 3 ஏக்கர் நிலத்தை பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை பிரச்னைக்குரிய நிலத்தின் அருகே இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மல்லப்பனின் மகன் முருகன், அவரது மனைவி சின்ன பாப்பா ஆகியோர், வீரபத்ரனிடம் தகராறு செய்துள்ளனர். அவரது தாய் கோபியம்மாளையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து வீரபத்ரனின் வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரது வீட்டின் மீது கற்கள் வீசி ஜன்னல்களை உடைத்தனர். தடுக்க வந்த வீரபத்ரனின் மனைவி ப்ரீத்தாவின் தாலிக்கயிற்றை பறித்து அவரையும், அவரது மகன், மகளையும் தாக்கியுள்ளனர்.இது குறித்து வீரபத்ரன் அளித்த புகார்படி, முருகன், சின்ன பாப்பா, தேவமூர்த்தி, தேவலட்சுமி ஆகிய நால்வரிடம் கந்திகுப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.