/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முனுசாமியை விமர்சித்த வி.சி., நிர்வாகி மீது புகார்
/
முனுசாமியை விமர்சித்த வி.சி., நிர்வாகி மீது புகார்
முனுசாமியை விமர்சித்த வி.சி., நிர்வாகி மீது புகார்
முனுசாமியை விமர்சித்த வி.சி., நிர்வாகி மீது புகார்
ADDED : மார் 05, 2025 08:22 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வி.சி.க., மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ், கடந்த, பிப்., 28ல், சூளகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரை விமர்சித்து ஒருமையில் பேசினார்.
இதனால், அ.தி.மு.க.,வினர் கடந்த, 1ல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து நேற்றும் கிருஷ்ணகிரி டவுன், காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, ஊத்தங்கரை, சாமல்பட்டி, ராயக்கோட்டை உள்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், கிருஷ்ணகிரி, வி.சி.க., மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் மீது நடவடிக்க கோரி புகார் மனு அளித்தனர்.
அதில், ஜாதி வன்மத்தை துாண்டும் வகையிலும், மிரட்டும் தோணியிலும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீது அவதுாறாகவும், தரக்குறைவாகவும் பேசிய கிருஷ்ணகிரி, வி.சி.க., மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி, தளி போலீஸ் ஸ்டேஷன்களில், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., முன்னாள் தலைவர் நாகேஷ், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பழனிசாமி, அனுமந்தபுரம் பஞ்., முன்னாள் தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர், புகார் மனுவழங்கினர்.