/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிவன், பார்வதி படத்துடன் உண்டியல் வைத்து பண மோசடி செய்வதாக புகார்
/
சிவன், பார்வதி படத்துடன் உண்டியல் வைத்து பண மோசடி செய்வதாக புகார்
சிவன், பார்வதி படத்துடன் உண்டியல் வைத்து பண மோசடி செய்வதாக புகார்
சிவன், பார்வதி படத்துடன் உண்டியல் வைத்து பண மோசடி செய்வதாக புகார்
ADDED : ஜன 25, 2025 02:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழைய சப்ஜெயில் சாலையை சேர்ந்தவர் சீனி-வாசன். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டர் அலுவ-லகம், எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தார். அதில், கிருஷ்ண-கிரி நகரில் பெங்களூரு ரோடு, சேலம் ரோடு, சப்ஜெயில் ரோடு பகுதிகளில், சிவன், பார்வதி சுவாமி படங்களுடன் கண்ணாடி உண்டியலை, வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் வைத்து பணம் வசூலிக்கின்றனர். இவற்றை ரவி என்ற தனிநபர் செய்து வருகிறார்.
ஆனால் பணம் வசூல் செய்வது எந்த டிரஸ்ட், சொசைட்டி, அல்-லது எந்த கோவில் போன்ற விபரம் இல்லை. எனவே விதிமுறை-களை மீறி நடக்கும் இதுபோன்ற செயல்களை அதிகாரிகள் தடுக்-கவில்லை என புகார் அளித்திருந்தார்.
இது குறித்து விசாரித்த கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்-கடேஷ் பிரபு கூறுகையில், ''இரு தரப்பினரையும் அழைத்து விசா-ரித்தோம். இதில், உண்டியல் வைத்தவர் தரப்பினர், ஏழை மக்க-ளுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட முறையில் உண்டியல் வைத்-துள்ளதாக கூறினர். ஆனால் அவ்வாறு வைக்க கூடாது.
தனிப்பட்ட முறையில் நீங்கள் வசூல் செய்வது வேறு. பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை அகற்ற வேண்டும் என கூறி உண்டியலை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என்றார்.

