/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குவாரியில் வைக்கும் வெடிகளால் வீட்டில் விரிசல் விழுவதாக புகார்
/
குவாரியில் வைக்கும் வெடிகளால் வீட்டில் விரிசல் விழுவதாக புகார்
குவாரியில் வைக்கும் வெடிகளால் வீட்டில் விரிசல் விழுவதாக புகார்
குவாரியில் வைக்கும் வெடிகளால் வீட்டில் விரிசல் விழுவதாக புகார்
ADDED : டிச 18, 2024 01:41 AM
கிருஷ்ணகிரி, டிச. 18-
பர்கூர் அடுத்த சூலாமலை கருக்கன்கொட்டாயை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் கிராமத்தில், 1,000 வீடுகள் உள்ளன. கிராமத்தின் அருகிலுள்ள தனியார் ஜல்லி கம்பெனி இயங்கி வருகிறது. ஜல்லி கற்களுக்காக பாறையில் வெடி வைப்பதால், வீடுகள் மற்றும் ஜன்னல்கள் அதிர்கின்றன. இதனால் சுவற்றில் விரிசல் விழுவதோடு, வெடி வைப்பதால் கிளம்பும் புகையால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.