/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பணம் பெற்று ஏமாற்றி வரும் பஞ்., துாய்மை காவலர் தி.மு.க., நிர்வாகி உடந்தை என எஸ்.பி.,யிடம் புகார்
/
பணம் பெற்று ஏமாற்றி வரும் பஞ்., துாய்மை காவலர் தி.மு.க., நிர்வாகி உடந்தை என எஸ்.பி.,யிடம் புகார்
பணம் பெற்று ஏமாற்றி வரும் பஞ்., துாய்மை காவலர் தி.மு.க., நிர்வாகி உடந்தை என எஸ்.பி.,யிடம் புகார்
பணம் பெற்று ஏமாற்றி வரும் பஞ்., துாய்மை காவலர் தி.மு.க., நிர்வாகி உடந்தை என எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : நவ 25, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அப்பாசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இதயவேந்தன். இவர் நேற்று கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தற்காலிக துாய்மை காவலர் சுசீலா,42. எங்கள் வீட்டில் கடந்த, 2010 ஆண்டிலிருந்து பணி புரிந்தார். அவரும், அவரது மகன் மணியும் பல தவணைகளில், என் மனைவியிடம், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். மேலும், டவுன் பஞ்.,ல் மகன் மணிக்கு பணி வாங்க, 3 லட்சம் ரூபாய், சுசீலா கேட்டார். அதற்கு, 'முதலில் நீங்கள் வாங்கிய பணத்தை கொடுங்கள்' என கேட்டோம். இதனால் கடந்த, 2022 முதல், அவர் வீட்டு வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டார். பணத்தையும் தரவில்லை. இது குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷன், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
சுசீலாவுக்கு ஆதரவாக, தி.மு.க.,வை சேர்ந்த, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணியின் கணவர் செந்தில்குமார் உள்ளதால், பணம் தர மறுக்கிறார்.
கடந்த, 2024 ஆக., 14ல் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசாரணையில், 1.80 லட்சம் ரூபாய் மட்டுமே கடனாக பெற்றதாகவும், விரைவில் கொடுத்து விடுதாக, கையெழுத்திட்டு சென்ற பின்னும், பணத்தை தரவில்லை. மேலும், எங்களிடம், 1.50 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதற்கு, 6.60 லட்சம் ரூபாய் கட்டி உள்ளதாக, எஸ்.பி., அலுவலகத்தில் எங்கள் மீது, சுசீலா புகார் அளித்துள்ளார். காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணியின் கணவரும், தி.மு.க., பிரமுகருமான செந்தில்குமாரின் துாண்டுதலின் படி, அனைத்தும் நடக்கிறது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் இதயவேந்தன் கூறுகையில், “காவேரிப்பட்டணத்தில் என் உறவுக்காரர் ஒருவரின் நிலத்தை அபகரிக்க, செந்தில்குமார் முயற்சி செய்தார். அதை நான் தடுத்ததால், அந்த கோபத்தில், என்னை பழிவாங்க துாய்மை காவலர் சுசீலாவை வைத்து, பொய் புகார் அளித்து வருகிறார்,” என்றார்.
இது குறித்து, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவரின் கணவரும், தி.மு.க., அமைப்புசாரா மாவட்ட துணைத்தலைவருமான செந்தில்குமாரை கேட்டபோது, “தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துாய்மை காவலர் சுசீலாவை, 10 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்ய வைத்து ஊதியம் வழங்கவில்லை. அவர் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்ந்து, பணம் பறிக்க பார்க்கிறார். இது குறித்து நான் கேட்டேன். மற்றபடி எனக்கும் இதயவேந்தனுக்கும் எந்த நிலப்பிரச்னையும், இல்லை. தன் தவறை மறைக்க, அனைவர் மீதும் அவர் பழி போடுகிறார்,” என்றார்.

