/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல ஆண்டாக எரியாத தெருவிளக்கு குற்றச்சம்பவங்களுக்கு வாய்ப்பு
/
பல ஆண்டாக எரியாத தெருவிளக்கு குற்றச்சம்பவங்களுக்கு வாய்ப்பு
பல ஆண்டாக எரியாத தெருவிளக்கு குற்றச்சம்பவங்களுக்கு வாய்ப்பு
பல ஆண்டாக எரியாத தெருவிளக்கு குற்றச்சம்பவங்களுக்கு வாய்ப்பு
ADDED : நவ 25, 2025 01:29 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, ஜமீல்சிட்டி வழியாக, பாஞ்சாலியூர், ஆர்.பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு, ஆயிரக்கணக்கானோர் தினமும் சென்று வருகின்றனர்.
அங்குள்ள தனியார் பள்ளியில் தற்போது சிறப்பு வகுப்புகள் நடப்பதால், இரவு, 8:00 மணிக்கு, மாணவ, மாணவியர் வகுப்பு முடிந்து வீடு திரும்புகின்றனர். ஆனால், இச்சாலையில் பல ஆண்டுகளாக தெருவிளக்குகள் எரிவதில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மின்வாரியத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குற்றச்சம்பவங்கள் நடக்கும் முன், ஜமீல்சிட்டியிலிருந்து பாஞ்சாலியூர் சாலையில் தெருவிளக்குகளை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.