ADDED : நவ 25, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, : தர்மபுரி டவுன் விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் லட்சுமி, 61. இவர் கடந்த நவ., 10 அன்று பெங்களூருவில் உள்ள, தன் மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
கடந்த, 22 அன்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 3 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

