/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுத்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையென புகார்

ADDED : ஜன 09, 2024 10:36 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்டது சங்கிலிவாடி. இக்கிராமத்திலுள்ள பாரதிதெருவை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு போதியளவில் தண்ணீர் வருவதில்லை என, புகார் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
எங்கள் தெருவில், 55 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 15வது நிதிக்குழு மானியத்தில், 2022-23ல், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், எங்கள் தெருவில் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தினமும், 5 குடம் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டிற்கு போதியளவில் இல்லாததால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களுக்கு போதியளவில் குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.