/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்
/
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்
ADDED : செப் 30, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி சாதாரண கூட்டம், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமையில் நடந்தது.
கடந்த கடந்த சில தினங்களுக்கு முன், கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் உயிரிழந்த, 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணகிரிக்கு வருகை புரிந்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, நீண்டகால கோரிக்கையான பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவித்தல், நகராட்சி வளர்ச்சிப்பணிகள், நகராட்சி அலுவலக வாகனங்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட, 31 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.இதில், நகராட்சி அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.