/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நில பிரச்னையில் இரு தரப்பினர் மோதல்; 2 பேருக்கு 'காப்பு'
/
நில பிரச்னையில் இரு தரப்பினர் மோதல்; 2 பேருக்கு 'காப்பு'
நில பிரச்னையில் இரு தரப்பினர் மோதல்; 2 பேருக்கு 'காப்பு'
நில பிரச்னையில் இரு தரப்பினர் மோதல்; 2 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 30, 2024 01:05 AM
நில பிரச்னையில் இரு தரப்பினர்
மோதல்; 2 பேருக்கு 'காப்பு'
கிருஷ்ணகிரி, செப். 30-
பர்கூர் அருகே உள்ள கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சாரதா, 30. அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 53. உறவினர்களான இவர்களுக்குள் நில பிரச்னை இருந்தது. கடந்த, 28ல் இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. இதில் சாரதா, அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் பாலமுருகன், 40, பழனியப்பன், 48, ஆகிய, 4 பேர் காயமடைந்தனர். சாரதா புகார் படி, பர்கூர் போலீசார், கோவிந்தராஜ், 53, விக்னேஷ், 38, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், செல்வி என்பவர் கொடுத்த மற்றொரு புகார் படி, பாலமுருகன் உள்பட, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.