/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை, கிரீடம் அணிவித்து வாழ்த்து
/
பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை, கிரீடம் அணிவித்து வாழ்த்து
பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை, கிரீடம் அணிவித்து வாழ்த்து
பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை, கிரீடம் அணிவித்து வாழ்த்து
ADDED : மார் 02, 2024 03:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி புதுார் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை, கலெக்டர் சரயு நேற்று பார்வையிட்டு,
புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ,
மாணவியருக்கு மாலை, கிரீடங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:
தமிழக அரசு பள்ளி மற்றும்
கல்லுாரி மாணவ, மாணவிகளின்
நலனுக்காக, அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தில் சிற்றுண்டி, அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியரின் உயர்கல்வி படிக்க மாதந்தோறும் 1,000 ரூபாய், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தன், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.