/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளருக்கு வாழ்த்து
/
கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளருக்கு வாழ்த்து
கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளருக்கு வாழ்த்து
கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளருக்கு வாழ்த்து
ADDED : ஜூலை 23, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டு, தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் மாதேஸ்வரன். மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவராகவும் உள்ளார்.
இவரை, தி.மு.க.,வின், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளராக நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ.,வை, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், கட்சியினருடன் நேற்று நேரில் சென்று சந்தித்து, பொன்னாடை, ஆளுயர மாலை அணிவித்து, புத்தர் சிலை வழங்கி வாழ்த்து பெற்றார்.