/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீதம் வகுப்புக்கு வந்தமாணவர்களுக்கு பாராட்டு
/
100 சதவீதம் வகுப்புக்கு வந்தமாணவர்களுக்கு பாராட்டு
100 சதவீதம் வகுப்புக்கு வந்தமாணவர்களுக்கு பாராட்டு
100 சதவீதம் வகுப்புக்கு வந்தமாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 18, 2025 01:23 AM
ஓசூர்:ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில் பேட ரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 895 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நேற்றுடன் வகுப்புகள் முடிந்த நிலையில் சென்ற கல்வியாண்டில், பணி நாட்களான, 199 நாட்களும் விடுமுறை எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பொன்னாகேஷ் தலைமை வகித்தார். விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி உறுப்பினர் ரஜினிகாந்த் பரிசுகள் வழங்கினார்.
பி.டி.ஓ., தலைவர் லக்கப்பா, வெங்கடேஷ் பாபு, ஆசிரியர் பயிற்றுனர் ஹேமலதா, ஆசிரியர்கள் சுஜாதா, நந்தினி, சாந்தி பாய், ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.