/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராகுல் கைதை கண்டித்து காங்., கட்சியினர் மறியல்
/
ராகுல் கைதை கண்டித்து காங்., கட்சியினர் மறியல்
ADDED : ஆக 12, 2025 05:11 AM
கிருஷ்ணகிரி: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், சமீபத்தில் டில்லியில் நிருபர்களை சந்தித்தபோது, பா.ஜ.,கவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து, தேர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளன எனக் கூறியுள்ளார். மேலும் பா.ஜ., அரசை கண்டித்து டில்லியில் ராகுல் தலைமையில், இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் நேற்று பேரணி சென்றனர். லோக்சபா வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ராகுலை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, மாவட்ட, காங்., கட்சி சார்பில், நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட கிராம சீரமைப்பு கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, மாநில செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில், ராகுலை கைது செய்த மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.