ADDED : ஆக 15, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துாரில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் வாராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. இதையொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கணபதி ஹோமம், கடம் புறப்பாடு நடந்தது.
பின் கோவிலின் உள் பிரகாரத்தில் மகா வாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானபக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து,
அம்மனை தரிசனம் செய்தனர்.