/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ் ஸ்டாண்ட், நீர்த்தேக்க தொட்டி, வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
/
பஸ் ஸ்டாண்ட், நீர்த்தேக்க தொட்டி, வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
பஸ் ஸ்டாண்ட், நீர்த்தேக்க தொட்டி, வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
பஸ் ஸ்டாண்ட், நீர்த்தேக்க தொட்டி, வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
ADDED : நவ 11, 2024 07:43 AM
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் பஞ்.,ல், நபா ர்டு திட்டத்தில், 29.97 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் சின்னாரன்தொட்டி பஞ்.,ல், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 34.23 லட்சம் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதலாக, 2 வகுப்பறைகள் கட்டும் பணி ஆகியவற்றை, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பூஜை செய்து துவக்கி வைத்தார். அதேபோல், வேப்பனஹள்ளி அரசு மாதிரிப்பள்ளி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணவாரனப்பள்ளி, சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 628 மாணவ, மாணவியருக்கு, 30.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
ஓசூர் அருகே பாகலுாரில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கோரிக்கையை ஏற்று, 17,449 சதுர அடி பரப்பளவில், ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டு மான பணிகளை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். மாவ ட்ட கலெக்டர் சரயு, ஓசூர், தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.