/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுகாதார நிலையம் கட்டும் பணி துவக்கம்
/
சுகாதார நிலையம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஆக 05, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டசபை தொகுதி வரட்டனப்பள்ளி பஞ்.,ல், 15வது நிதி குழு மானிய திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார்டுகளில் மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்படுகிறது.
இந்த பணிகளையும் மதியழகன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.