/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி
/
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி
ADDED : ஜூன் 05, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி மேடை, பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரியில், மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறையினர் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியில், லட்சக்கணக்கானோர் கூடுவர். இதில், மா விவசாயிகளுக்கான கருத்தரங்குகள், விளையாட்டு அரங்குகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் அமைக்கப்படும்.
நடப்பாண்டில், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள, தனியார் திடலில் மாங்கனி கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த மாதம் பூமி பூஜை செய்து, பணிகள் துவங்கப்பட்டன. தற்போது விழா மேடை, பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும் ஜூன், 2வது வாரத்தில் மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான பணிகள், 75 சதவீதம் முடிந்துள்ளது. பொதுமக்கள் வந்து செல்ல தனித்தனி பாதைகள், வாகன நிறுத்துமிடம் என, அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. மா விவசாயிகளுக்கான கருத்தரங்குடன், பொதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. வேளாண் அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோரிடம் தேதி கேட்டு, மாங்கனி கண்காட்சி துவங்கும் நாள், ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்' என்றனர்.