/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.15 லட்சத்தில் நுழைவாயில் கட்டும் பணி துவக்கி வைப்பு
/
ரூ.15 லட்சத்தில் நுழைவாயில் கட்டும் பணி துவக்கி வைப்பு
ரூ.15 லட்சத்தில் நுழைவாயில் கட்டும் பணி துவக்கி வைப்பு
ரூ.15 லட்சத்தில் நுழைவாயில் கட்டும் பணி துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:02 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டு, தி.மு.க., கவுன்சிலரும், பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் மற்றும் முனீஸ்வர் நகர் குடியிருப்பு சங்கம் சார்பில், முனீஸ்வர் நகர் பகுதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நுழைவுவாயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜை, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது.
முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், பூமிபூஜை செய்து நுழைவுவாயில் பணியை துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், தி.மு.க., பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞானசேகரன், கவுன்சிலர்கள் வெங்கடேஷ், தேவி மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.