ADDED : நவ 04, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 20, ஓசூரில் கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, தன் வீட்டில் இருந்து, காவேரிப்பட்டணத்திற்கு யமாஹா எப்.இசட் பைக்கில் சென்றபோது, செல்லம்பட்டி, பெத்தனுார் பகுதியில், வளைவிலுள்ள சாலையோர புளிய மரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், சம்பவ இடத்தில் பிரவீன்குமார் உயிரிழந்தார். தகவலின்படி, நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

