/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் பி.டி.ஓ., ஆபீசில் நுகர்வோர் குழு கூட்டம்
/
பர்கூர் பி.டி.ஓ., ஆபீசில் நுகர்வோர் குழு கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் சமூக நுகர்வோர் காலாண்டு குழுக்கூட்டம் நடந்தது. பொதுமேலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க, மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ''உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சாலையோரங்களில் உள்ள கட்சி கம்பங்களை அகற்ற வேண்டும்.
பர்கூர் பகுதியில் இயங்கும் ரேஷன் விலைக்கடைகளில் தரமான அரிசியை சிலர் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்களின் எடை மோசடியை தடுக்க, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து வழங்க வேண்டும். கிராம பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சரிவர பணிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்,'' என்றார். பி.டி.ஓ., அலுவலக பணியாளர்களான ஜெயலட்சுமி, சுவிதா, மற்றும் நுகர்வோர் அமைப்பின் ஜெய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.