sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா ஓசூர் விமான நிலையம்?

/

இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா ஓசூர் விமான நிலையம்?

இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா ஓசூர் விமான நிலையம்?

இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா ஓசூர் விமான நிலையம்?


ADDED : ஜன 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து என்.ஓ.சி., பெறுவது மற்றும் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், ஆந்திர மாநில எல்லைக்கு விமான நிலையம் செல்வ-தாக தகவல் பரவ துவங்கியுள்ளது.

தமிழக எல்லை நகரான ஓசூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகு-தியாகும். இங்கு, பன்னாட்டு விமான நிலையம் இல்லாததால், 75 கி.மீ., தொலைவில் உள்ள பெங்களூரு கெம்பே கவுடா பன்-னாட்டு விமான நிலையத்திற்கு தான், ஓசூர் பகுதி மக்களும், தொழில்துறையினரும் செல்ல வேண்டியுள்ளது. கடும் போக்குவ-ரத்து நெரிசல் காரணமாக ஓசூரில் இருந்து விமான நிலையம் செல்ல அதிகப்பட்சம், இரண்டரை மணி நேரம் வரை ஆகி விடு-கிறது.

பன்னாட்டு விமான நிலையம்

தொழில் வளர்ச்சியடையவும், மக்கள் பயன்பாட்டிற்கும் ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று, கடந்த, 2021 டிச., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தேவை மதிப்பீடு, விமான போக்குவரத்து முன்னறிவிப்பு மற்றும் சாத்திய-மான இடங்களை அடையாளம் காண ஆலோசகர்களை அழைத்தது.

கடந்தாண்டு ஜூன், 27ல், தமிழக சட்டசபையில், 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஓசூரில் ஆண்டுக்கு, 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்' என, அறிவித்தார்.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்தின் தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு சென்று விடும் என, கர்நாடகா அரசியல்வாதிகள் நினைக்கின்-றனர். அதனால், தமிழக அரசிற்கு போட்டியாக, பெங்களூரு நக-ருக்கு தெற்கே, ஓசூரையொட்டி சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளளது. அங்கு, 3,000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில், 2,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் சிரமம் இருக்காது என, கர்நாடகா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், தமிழக எல்லை-யான ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை, தமி-ழகம் கைவிட வேண்டிய நிலை கூட உருவாகலாம்.

5 இடங்கள் தேர்வு

இதுமட்டுமின்றி, பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலை-யத்தில் இருந்து, 150 கி.மீ., சுற்றளவிற்கு எந்த விமான நிலையத்-திற்கும் அனுமதி கொடுக்க கூடாது என்ற நிபந்தனை, 2033 ம் ஆண்டு வரை உள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஓசூர், 75 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால், ஓசூரில் விமான நிலையம் அமைக்க, கெம்பே கவுடா விமான நிலையம் தடையின்மை சான்று வழங்க வேண்டும். இல்லா-விட்டால் விமான நிலையம் அமைப்பது சிரமம் என்ற கருத்து நிலவுகிறது.

இதற்கிடையே, ஓசூர் அருகே சின்ன பேலகொண்டப்பள்ளி, 'தால்' நிறுவனத்தில் இருந்து, 9 கி.மீ., தொலைவில் ஒரு இடம் மற்றும் குருபரப்பள்ளியை அடுத்துள்ள டெல்டா நிறுவனம் அருகே ஒரு இடம் உட்பட மொத்தம், 5 இடங்களை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகள் தேர்வு செய்து, கடந்த செப்., மாதம் ஆய்வு செய்தனர். மேலும், கெம்பேகவுடா விமான நிலைய நிர்-வாகம் மற்றும் ஓசூர் தால் நிர்வாகம் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி சென்றுள்ளனர்.

நாயுடு விருப்பம்

அது தொடர்பான இடைக்கால அறிக்கை, தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில எல்லையான குப்பத்திற்கு அருகே, தமிழக எல்லையான கிருஷ்ணகிரியையொட்டி இரு மாநில மக்-களும் பயன்படுத்தும் வகையில், பொதுவாக ஒரு விமான நிலை-யத்தை அமைக்க முயற்சிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே விமான நிலையம் அமைந்தால், கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., துாரத்தை தாண்டி விடும். அதனால் அதற்கு என்.ஓ.சி., பெற தேவை-யில்லை. ஆனால், கிருஷ்ணகிரி எல்லை பகுதிகளில், 2,000 ஏக்கர் நிலம் இல்லை. விவசாய நிலங்களை தான் கையகப்படுத்த வேண்டும். ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதாக இருந்தாலும், விவசாய நிலங்களையும் கையகப்படுத்த வேண்-டிய சூழ்நிலை வரும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு இருக்-குமா என்பது கேள்விக்குறி தான்.

இது குறித்து, கிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., கோபிநாத் கூறு-கையில், ''தற்போது, 5 இடங்களை ஆய்வு செய்துள்ளனர். ஆனால், எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்-பது முடிவாகவில்லை. வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளி-யாகும் என எதிர்பார்க்கிறோம். கிருஷ்ணகிரியை ஒட்டி குப்பத்-திற்கு விமான நிலையத்தை கொண்டு செல்ல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புவதாக வரும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என எனக்கு தெரியவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us