/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானைகளால் தொடரும் பயிர் சேதம்: விவசாயிகள் கவலை
/
யானைகளால் தொடரும் பயிர் சேதம்: விவசாயிகள் கவலை
ADDED : நவ 02, 2024 04:17 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலுஹள்ளி காப்புக்காட்டில், இரு யானைகள் தனியாக முகாமிட்டுள்ளன. இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருவதால், விவசாய பயிர்கள் சேதமாகி வருகிறது.
குறிப்பாக, பிக்கனப்பள்ளி, மட்ட மத்திகிரி, ஒட்டர்பாளையம் ஆகிய கிராமங்களில் தினமும் விவசாய பயிர்கள் சேதமாகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டவில்லை.அதனால் யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வழி தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். பகல் நேரத்தில் விவசாய தோட்டங்களில் சுற்றித்திரியும் யானைகளை, பொதுமகக்கள் கற்களை வீசி விரட்டுகின்றனர். பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் நேற்று காலை இரு ஆண் யானைகள் சுற்றித்திரிந்தன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனர். பயிர்களை நாசம் செய்த பின் யானைகள் வனப்பகுதி நோக்கி சென்றன. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.