/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுனர்களுக்கு இடையூறாக மாடுகள் அபராதம் விதிக்குமா மாநகராட்சி
/
ஓட்டுனர்களுக்கு இடையூறாக மாடுகள் அபராதம் விதிக்குமா மாநகராட்சி
ஓட்டுனர்களுக்கு இடையூறாக மாடுகள் அபராதம் விதிக்குமா மாநகராட்சி
ஓட்டுனர்களுக்கு இடையூறாக மாடுகள் அபராதம் விதிக்குமா மாநகராட்சி
ADDED : ஜூன் 29, 2024 02:55 AM
ஓசூர்: ஓசூரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணியை தொடர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உழவர் சந்தை சாலை, தாலுகா அலுவலக சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை, பாகலுார் சாலை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை சாலை, நேதாஜி ரோடு, எம்.ஜி., ரோடு உட்பட நகரின் முக்கிய சாலைகளில் தினமும் தனிநபரின் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலையின் குறுக்கே நீண்ட நேரம் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அவ்வப்போது அரங்கேறுகின்றன.
கடந்த, 2022ல், நடந்த மாநகராட்சி பொது சுகாதார குழு கூட்டத்தில், சாலையில் திரியும் மாடுகளை பிடித்து முதல் முறை, 1,000 ரூபாயும், அடுத்தடுத்து அதே மாடு சாலைக்கு வந்தால், 3,000, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பத்தில், மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தனர். ஆனால் அதன் பின், ஊழியர்கள் அப்பணியை நிறுத்தி விட்டனர்.
இதனால், ஓசூரில் மீண்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில நேரங்களில் சாலையில் மிரண்டு ஓடும் மாடுகள், வாகன ஓட்டிகளை கீழே தள்ளி விடுகின்றன. இந்நிலையில் அமைச்சர் நேரு, சாலைகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்தால், பறிமுதல் செய்யப்பட்டு ஏல விட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே மாநகராட்சி நிர்வாகம், மாடுகளை பிடிக்க தனி குழுவை அமைத்து, அவற்றை பிடித்து தொடர்ந்து அபராதம் விதித்தால் மட்டுமே, சாலைகளில் மாடுகள் திரிவது குறையும்.