/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு நாளை துவக்கம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு நாளை துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்லுாரி முதல்வர் கீதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடப்பாண்டில் இளங்கலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை (2ம் தேதி) துவங்குகிறது. அதன்படி, சிறப்பு ஒதுக்கீடு மாணவியர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீராங்கனைகள், அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவியர், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள்) நடக்கிறது. வரும், 4ல், பி.காம்., வணிகவியல் மற்றும் பி.காம்., நிறும செயலாண்மை
பாடப்பிரிவுகளுக்கும், 6ம் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கும், 9ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள், உரிய சான்றிதழ்கள், பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள், கல்லுாரி கட்டணமாக, 2,900 ரூபாய் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவியர், 1,605 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.