/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
/
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
ADDED : மே 31, 2025 06:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடக்கிறது. ஜூன், 2ல், கல்லுாரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில், சிறப்பு மாணவர்கள் பிரிவில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு துறை மாணவர்கள், அந்தமான் நிகோபாரை சார்ந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 3ல், முன்னாள் படைவீரர்கள் பிள்ளைகள், பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகள், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு வரும், 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கும், 5ல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். 6ல்,அனைத்து கலை பாடப்பிரிவுகள் மற்றும் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, 250க்கு மேல் தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும், 9ல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், 11ல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, தரவரிசை மதிப்பெண், 250க்கு கீழ் எடுத்த மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன், சேர்க்கை கட்டணமாக கலைப்பிரிவுக்கு, 2,905, ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,925 ரூபாய், கணினி அறிவியல் பிரிவிற்கு, 2,025 ரூபாய் எடுத்து வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.