/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி அரசு ஆடவர் கலை கல்லுாரியில் முதுநிலை பாட பிரிவுக்கு கலந்தாய்வு

ADDED : ஆக 08, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்லுாரியில், 2025-2026ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாட பிரிவுகள் எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகிய பாட பிரிவுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும், 11ல் சிறப்பு ஒதுக்கீடும் (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, பழங்குடியினர்), 13ல் பொது கலந்தாய்வும் நடக்க உள்ளது.
கலந்தாய்வின்போது, மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்றிதழ், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் (சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்), கலைப்பிரிவுக்கு, 2,280 ரூபாய், அறிவியல் பிரிவுக்கு, 2,340 ரூபாய், கணினி அறிவியல் பிரிவுக்கு, 2,540 ரூபாய், சேர்க்கை கட்டணமாக கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.