/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தைகள் கண்ணெதிரே தம்பதி வெட்டிக்கொலை
/
குழந்தைகள் கண்ணெதிரே தம்பதி வெட்டிக்கொலை
ADDED : நவ 02, 2024 02:35 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை அடுத்த கே.பாப்பாரப்பட்டி பஞ்.,க்குட்பட்ட தலைவிரிச்சான் கொட்டாயைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 37. இவரது மனைவி ருக்மணி, 27. இவர்களுக்கு யுவஸ்ரீ, 8, நவநிகா, 3, என்ற இரு மகள்கள் உள்ளனர்.
மாரிமுத்து, திருப்பூரில் டூ - வீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். மாரிமுத்துவின் தம்பி முருகன், 33; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி, 23, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
மாரிமுத்துவுக்கும், முருகனுக்கும் நிலப்பிரச்னை இருந்தது. மாரிமுத்து, நேற்று முன்தினம் இரவு, ருக்மணி, குழந்தைகளுடன் தன் நிலத்தில், தமிழக அரசின் கனவு இல்ல திட்டத்தில் புதிதாக கட்டும் பணியை பார்க்கச் சென்றார்.
அப்போது, சிவரஞ்சனி அவர்களை வழிமறித்து திட்டியுள்ளார். சத்தம்கேட்டு, அங்கு அரிவாளுடன் வந்த முருகன், ருக்மணி, மாரிமுத்து இருவரையும் சரமாரியாக வெட்டி தப்பினார். இதில், மாரிமுத்து, ருக்மணி இறந்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானியில் பதுங்கியிருந்த முருகன், சிவரஞ்சனியை ஊத்தங்கரை போலீசார், கைது செய்தனர். நிலத்தகராறில் அண்ணன், அண்ணியை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

