ADDED : ஜூலை 06, 2025 01:26 AM
அரூர், தி.மு.க., கூட்டணியில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என, கொ.ம.தே.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொ.ம.தே.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அரூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். இதில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொ.ம.தே.க., ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, தர்மபுரி கிழக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் அவருடைய உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கிராமங்கள் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஏஜன்ட்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் இளங்கோ, முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.