/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழா வழிகாட்டு நெறிமுறை அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
/
எருதுவிடும் விழா வழிகாட்டு நெறிமுறை அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
எருதுவிடும் விழா வழிகாட்டு நெறிமுறை அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
எருதுவிடும் விழா வழிகாட்டு நெறிமுறை அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 03, 2024 12:26 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், எருது விடும் விழா, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தப்படும் எருது விடும் விழா குறித்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி விழாக்குழுவினர், எருதுவிடும் விழா குறித்து ஒரு மாதத்திற்கு முன், எழுத்து பூர்வமாக இடம், தேதியை குறிப்பிட்டு முறையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட கிராமங்களுக்கு மட்டும், விழா நடத்த அனுமதி வழங்கப்படும். இதற்கும் விழா குழுவினரே பொறுப்பு என, உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தில், காப்பீடு செய்ய வேண்டும்.
எருதுவிடும் விழாவை, 250 காளைகளுடன், 5 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து, 5 கி.மீ., தொலைவிலுள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை தடுப்புகள் மூலம் மூட வேண்டும். எருதுகள் ஓடும் பகுதியில், 8 அடி உயர இரட்டை தடுப்பரண்கள், 3 நாட்களுக்கு முன் அமைத்து பொதுப்பணித்துறை சான்றிதழ் பெற வேண்டும்.
காளைகள் நிற்குமிடமிடத்தில் போதிய இடம், தண்ணீர் வசதிகளுடன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காளைகளுக்கு வரிசை எண்கள், உரிய பரிசோதனை, மருத்துவக் குழுவினர், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், மின்வாரிய ஊழியர்கள் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.