/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் முதலை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் முதலை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்
ஒகேனக்கல் காவிரியாற்றில் முதலை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்
ஒகேனக்கல் காவிரியாற்றில் முதலை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்
ADDED : ஜூலை 17, 2025 01:20 AM
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்து மகிழ்வர். மேலும் முன்னோர்களுக்கு ஈமச்சடங்கு காரியத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கின் போது ஏராளமான முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்படும். கடந்த, 20 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து காணப் படுகிறது. இதில், கர்நாடகா நீர்த்தேக்க பகுதிகளில் இருந்து, 6 அடி நீள முதலை ஒன்று நேற்று காலை நீரில் அடித்து வரப்பட்டுள்ளது. அது, ஒகேனக்கல் முதலைப்பண்ணை எதிரே ஆற்றின் நடுவே பாறை மீது படுத்திருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா
பயணிகள் அச்சமடைந்தனர்.
நேற்று முதலை இருந்த இடம், மக்கள் ஈமச்சடங்கு காரியம் நடத்தும் பகுதி என்பதால், மக்கள் அச்சமடைந்தனர். ஆற்றிலிருந்து முதலை வெளியேறி, குடியிருப்பு பகுதிகளில் செல்வதை தடுக்கவும்,
அசம்பாவிதத்தை தவிர்க்கவும் ஒகேனக்கல் வனத்துறையினர் முதலையை கண்காணித்து பிடித்து, ஒகேனக்கல்
முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அடைக்க, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

